Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
பணிந்து பாடி போற்றுவோம்
Key: C
C | |
Current Key: | ^ |
Chorus:
C | Am | G | C |
பணிந்து | பாடி | போற்று | வோம் |
C | Am | Em | C |
கனிந்த | ஆவி | உண்மையோ | டு |
F | C | Am | G | |
எம் | தேவ | னை – | ஆ . . ஆ . . | ஆ . . |
C | F | C | |
1. | மோசேயை விடப் | பெரிய | வர் |
Dm | Bb | C | |
பிர | மாணங்களை நிறை | வேற்றின | வர் |
Cm | G | Cm |
வேஷங்கள் யாவையும் | வெறுப்ப | வர் |
Bb | F | G | C |
பா | ச | மாய்த் | தொழுதிடுவோம் -ஆ . . ஆ . . |
2.ஆரோனை விடப் பெரியவர்
சதா மாறாத ஆசாரியர்
வாரே னென்று கூறினவர்
நேரே நாம் தொழுதிடுவோம்
3.ஆலயத்தை விடப் பெரியவர்
இங்கு ஆலயமாக இருந்தவர்
ஆலயம் நீங்களே என்றவர்
அலங்காரமாய் தொழுதிடுவோம்
4.யோனாவை விடப் பெரியவர்
கெட்டுப் போனோர்களுக்கும் உரியவர்
தாமாக ஜீவன் தந்தவர்
கோணாமல் தொழுதிடுவோம்
5.சாலமோனை விடப் பெரியவர்
தேவஞான மென்ற பெயர்க்குரியவர்
காலமெல்லாம் கூட இருப்பவர்
தாராளமாய்த் தொழுதிடுவோம்
6.அதிபதிகளை விடப் பெரியவர்
சர்வ அதிகாரங்களுக்கும் உரியவர்
கர்த்தாதி கர்த்தாவுமானவர்
கருத்தோடே தொழுதிடுவோம்
7.எல்லாரிலும் மேலானவர்
நமக்கெல்லாமுமாக உள்ளவர்
அல்லேலூயாவுக் கருகர்
வல்லமையாய்த் தொழுதிடுவோம்