Tamil Lyrics and Chords
Transpose: 0
எல்லாம் இயேசுவே
Key: D
D | |
CurrentKey: | ^ |
பல்லவி:
D | Bm | A |
எல்லாம் இயேசுவே – எனக் | கெல்லா மேசு | வே |
D | Em | Bm | A | D |
தொல்லை | மிகு | மிவ்வு | லகில் – | தோழர் யேசுவே ; |
சரணங்கள்
D | G | A | D | Bm | G | A | D | |
1. | ஆய | னும் | சகாய | னும் | நேய | னும் | உபாய | னும் , |
Bm | D | A | D |
நாயனும் | எனக்கன்பான | ஞானமண | வாளனும் — எல்லாம் |
2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் ,
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் — எல்லாம்
3. கவலையில் ஆறுதலும் , கங்குலிலென் ஜோதியும் ,
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் — எல்லாம்
4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ,
ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும் —எல்லாம்
5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் – சம்பாத்யமும் ,
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் — எல்லாம்
6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ,
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் — எல்லாம்