Tamil Lyrics and Chords
விசுவாசியின் காதில் பட
இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி
இனிப்பாகுது பாசம்
1. பசித்த ஆத்துமாவைப்
பசியாற்று மன்னாவதுவே
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம்
முற்றும் அந்தப் பெயரே – விசுவாசியின்
2. துயரையது நீக்கி
காயமாற்றிக் குணப்படுத்தும்
பயங்கள் யாவும் இயேசுவென்றால்
பறந்தோடியே போகும் – விசுவாசியின்
3. காயப்பட்ட இருதயத்தைக்
கழுவிச் சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது
மயக்கமின்றிவிடுக்கும் – விசுவாசியின்
4. எல்லை இல்லாக் கிருபைத்திரள்
ஏற்றுநிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச்செல்வம்
இயேசுவென்ற பெயரே – விசுவாசியின்
5. என்னாண்டவா, என் ஜீவனே
என் மார்க்கமே, முடிவே
என்னால் வருந்துதியை நீரே
ஏற்றுக்கொள்ளும், தேவே – விசுவாசியின்