Chorus:
இயேசு எனக்காக சிலுவையில் மாண்டீரே!
Verse:1
பாவி எனக்காக தேவே நீர்
ஆவியை விட்டீரோ!
கோரமாய்க் குருதி வடித்தீரோ – இயேசு
பாரத்தால் துவண்டு துடித்தீரோ!
Verse:2
நீச பாவச் செயல்களில்
ஈசனே உழன்றேனே!
பாவப் பாரத்தால் நான் சோர்வுற்றேன்
சிலுவையண்டை தாழ்ந்து வாரேன் நான்
Verse:3
தலை கைகள் கால்கள் விலா
நிலையில்லா வெள்ளமாய்
செந்நீர் வடிப்பதென் பாவமே – இவ்
வன்பிற்குப் பாத்திரன் அல்ல நான்
Verse:4
ஐயோ பாவி என்னை தேவா
உய்விக்க வந்தீரோ!
பாவமே ஆனீரோ பாவிக்காய் – இயேசு
சாபமே ஏற்றீரோ என்னால் நீர்
Verse:5
என் தேவனே தேவனே
ஏனென்னைக் கைவிட்டீர்
என் கைப்பற்றவல்லோ கைவிட்டீர் – இயேசு
கண்ணீரிவ்வன்பிற் கீடாகுமோ
Verse:6
இந்தக் கோரக் காட்சி காணத்
தந்தை சகியாமல்
மைந்தனை விட்டு நீர் திரும்பி – தேவா
இந்தப் பாவியைக் கண்ணோக்கினீர்
Verse:7
ஐயோ என் செய்வேன் பாவி நான்
உள்ளம் உடைவேனோ?
கண்ணீர் சொரிவேனோ என் இயேசுவே – ஐந்து
காயங்கள் கழுவக் கரைந்து