Tamil Lyrics and Chords
Transpose: 0
தேன் இனிமையிலும்
Key: F
F | |
CurrentKey: | ^ |
பல்லவி
F | Gm | Am | Dm |
தேன் இனி | மையிலும் | ஏசுவின் | நாமம் |
Gm | C | F |
திவ்விய ம | துரமா | மே – அதைத் |
F | Am | F | Am | F | Am | C |
தேடியே | நாடி | ஓடியே | வருவாய், | தினமும் | நீ மன | மே |
சரணங்கள்
F | Gm | Am | Dm | |
1. | காசினி | தனிலே | நேசம | தாகக் |
Gm | C | F |
கஷ்டத்தை | உத்தரித் | தே – பாவக் |
F | Am | F | Am |
கசடதை | அறுத்துச் | சாபத்தைத் | தொலைத்தார் |
F | Am | C |
கண்டுனர் | நீ மன | மே — தேன் |
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே — தேன்
3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும்
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ, மனமே — தேன்
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே — தேன்
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே — தேன்